1.2 டீ மேட் (Demat or Dematerialised Account)
பங்குகளை காகிதமாகவோ (Physical) அல்லது டிஜிட்டல் முறையிலோ (Demat) வாங்கலாம். Demat முறையில் வாங்குவது நல்லது. Demat முறையில் உங்களின் பங்குகள் மின்னணு முறையில் சேமிக்கப்படும். உங்களுக்கு காகிதமாக அனுப்ப மாட்டார்கள். ஆகவே தொலைந்து போவதோ அல்லது அழிந்து போவதோ கிடையாது. இணையத்தின் மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்து பங்குகளை வியாபாரம் செய்யலாம்.
Demat கணக்கு தொடங்க என்ன தேவை?
1. PAN கார்டு (வருமான வரி கணக்கு)
2. முகவரி நிருபணம் புகைப்படத்துடன் (இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு)
2.1 கடவுச் சீட்டு (Passport)
2.2 வாக்காளர் அடையாள அட்டை (Voters ID)
2.3 குடும்ப அட்டை (Ration Card)
2.4 ஓட்டுனர் உரிமம் (Driver's License)
2.5 வருமான வரி தாக்கல் செய்த ரசீது
2.6 மின்சார அட்டை/ தொலைபேசி ரசீது
2.7 இது எல்லாத்துக்கும் மேல் உங்களின் அருமையான முகம். (அதுதாங்க உங்களின் புகைப்படம்)
3. தொடக்க செலவு
எந்த நிறுவனத்திடம் நீங்கள் தொடங்க விரும்புகிறீர்களோ அதை பொறுத்து வேறுபடும். ஒப்பிட்டு பார்க்க இங்கே சொடுக்கவும்
http://www.nsdl.co.in/
http://www.cdslindia.com/
4. உங்கள் சார்பாக நியமிக்கப்பட்டவர் (Nominee)
நீங்கள் உங்கள் சார்பாக ஒருவரை நியமிக்கலாம். இவருக்கு நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் சார்பாக உங்கள் கணக்கில் உள்ள பங்குகளை அவர் வசம் ஒப்படைக்கப்படும். முக்கியமான விஷயம் அவர் வாங்குவதால் அது அவருக்கே சொந்தமில்லை. உயில்படியோ அல்லது சட்டபடியோ எல்லோருக்கும் கொடுக்கப்படும்.

0 comments:
Post a Comment