நிறுவனங்களின் வகைகள்
உதாரணமாக ஒரு மளிகை கடையை எடுத்துக் கொள்ளவோம். அதன் முதலாளி ஒருவர். லாபமோ நட்டமோ அது அவரையே சேரும். அதையே அவர் நண்பர்களை பங்குதாரர் ஆக்கி நாலைந்து இடங்களில் கடையை நிறைய இடங்களில் ஆரம்பித்து நடத்தினால் அது பங்குதாரர் நிறுவனம் (Partnership Firm).
தனியார் நிறுவனகள் (Private Company)
இந்த மாதிரி நிறுவனங்கள் முறையாக அரசிடம் அனுமதி பெற்று, நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து வியாபாரம் செய்யும் பொது அவை தனியார் நிறுவனங்கள். இவற்றில் பங்குதாரர்கள் குறைவாக இருப்பார்கள். ஒரு பங்குதாரருக்கு மற்றவரை தெரிந்திரிக்கும். ஒரே குடும்பத்தார் குடும்ப தொழிலாக நடத்தலாம். தொடங்கியவர் அப்பாவாக இருந்தால் அவருக்கு அதிக அளவில் பங்குகளை வைத்துஇருப்பார். மனைவி, மகன்கள், மகள்கள் மாற்ற பங்குதாரர்களாக இருப்பார்கள். நண்பர்களாக சேர்ந்து நடத்துபவர்களும் உண்டு.
பொது துறை நிறுவனகள் (Public Company)
இதையே அவர் உலகம் முழுவதும் அல்லது இந்தியா முழுவதும் செய்ய விரும்பினால் அதற்க்கு பணம் மிகவும் அதிகமாக தேவை படும். அதற்க்கு அவர் தன் கண்ணுக்கு தெரிந்த பங்குதாரர்களை மட்டும் நம்ப முடியாது. தன் நிறுவனத்தை பொது துறை நிறுவனமாக்க வேண்டும். அப்பொழுது அவர் தன் நிறுவனதின் மதிப்பை ரூ 2, ரூ 5 அல்லது ரூ10 பங்குகளாக பிரித்து தனக்கு வைத்து கொண்டு மற்றதை வெளியிடுவார்.
IPO (Intitial Public Offer)
இது IPO (Initial Public Offer) எனப்படும். அப்பொழுது ரூ 2 முகமதிப்பு என்றால் அதன் விலையில் அல்லது அதற்க்கு அதிகமாக வெளியிடலாம். நல்ல லாபத்தில் போகும் நிறுவனங்கள் அதிகமாக வைத்து வெளியிடும்.
சந்தையில் வாங்குவது (Secondary market)
IPO வெளியிடப்பட்ட பிறகு பங்குகளை சந்தயிலும் வாங்கலாம். சரி எப்படி வாங்குவது அதற்க்கு என்னென்ன தேவை என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

0 comments:
Post a Comment