1.2 டீ மேட் (Demat or Dematerialised Account)

பங்குகளை காகிதமாகவோ (Physical) அல்லது டிஜிட்டல் முறையிலோ (Demat) வாங்கலாம். Demat முறையில் வாங்குவது நல்லது. Demat முறையில் உங்களின் பங்குகள் மின்னணு முறையில் சேமிக்கப்படும். உங்களுக்கு காகிதமாக அனுப்ப மாட்டார்கள். ஆகவே தொலைந்து போவதோ அல்லது அழிந்து போவதோ கிடையாது. இணையத்தின் மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்து பங்குகளை வியாபாரம் செய்யலாம்.

Demat கணக்கு தொடங்க என்ன தேவை?

1. PAN கார்டு (வருமான வரி கணக்கு)
2. முகவரி நிருபணம் புகைப்படத்துடன் (இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு)
2.1 கடவுச் சீட்டு (Passport)
2.2 வாக்காளர் அடையாள அட்டை (Voters ID)
2.3 குடும்ப அட்டை (Ration Card)
2.4 ஓட்டுனர் உரிமம் (Driver's License)
2.5 வருமான வரி தாக்கல் செய்த ரசீது
2.6 மின்சார அட்டை/ தொலைபேசி ரசீது
2.7 இது எல்லாத்துக்கும் மேல் உங்களின் அருமையான முகம். (அதுதாங்க உங்களின் புகைப்படம்)

3. தொடக்க செலவு

எந்த நிறுவனத்திடம் நீங்கள் தொடங்க விரும்புகிறீர்களோ அதை பொறுத்து வேறுபடும். ஒப்பிட்டு பார்க்க இங்கே சொடுக்கவும்
http://www.nsdl.co.in/
http://www.cdslindia.com/

4. உங்கள் சார்பாக நியமிக்கப்பட்டவர் (Nominee)

நீங்கள் உங்கள் சார்பாக ஒருவரை நியமிக்கலாம். இவருக்கு நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் சார்பாக உங்கள் கணக்கில் உள்ள பங்குகளை அவர் வசம் ஒப்படைக்கப்படும். முக்கியமான விஷயம் அவர் வாங்குவதால் அது அவருக்கே சொந்தமில்லை. உயில்படியோ அல்லது சட்டபடியோ எல்லோருக்கும் கொடுக்கப்படும்.

நிறுவனங்களின் வகைகள்
உதாரணமாக ஒரு மளிகை கடையை எடுத்துக் கொள்ளவோம். அதன் முதலாளி ஒருவர். லாபமோ நட்டமோ அது அவரையே சேரும். அதையே அவர் நண்பர்களை பங்குதாரர் ஆக்கி நாலைந்து இடங்களில் கடையை நிறைய இடங்களில் ஆரம்பித்து நடத்தினால் அது பங்குதாரர் நிறுவனம் (Partnership Firm).

தனியார் நிறுவனகள் (Private Company)
இந்த மாதிரி நிறுவனங்கள் முறையாக அரசிடம் அனுமதி பெற்று, நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து வியாபாரம் செய்யும் பொது அவை தனியார் நிறுவனங்கள். இவற்றில் பங்குதாரர்கள் குறைவாக இருப்பார்கள். ஒரு பங்குதாரருக்கு மற்றவரை தெரிந்திரிக்கும். ஒரே குடும்பத்தார் குடும்ப தொழிலாக நடத்தலாம். தொடங்கியவர் அப்பாவாக இருந்தால் அவருக்கு அதிக அளவில் பங்குகளை வைத்துஇருப்பார். மனைவி, மகன்கள், மகள்கள் மாற்ற பங்குதாரர்களாக இருப்பார்கள். நண்பர்களாக சேர்ந்து நடத்துபவர்களும் உண்டு.

பொது துறை நிறுவனகள் (Public Company)
இதையே அவர் உலகம் முழுவதும் அல்லது இந்தியா முழுவதும் செய்ய விரும்பினால் அதற்க்கு பணம் மிகவும் அதிகமாக தேவை படும். அதற்க்கு அவர் தன் கண்ணுக்கு தெரிந்த பங்குதாரர்களை மட்டும் நம்ப முடியாது. தன் நிறுவனத்தை பொது துறை நிறுவனமாக்க வேண்டும். அப்பொழுது அவர் தன் நிறுவனதின் மதிப்பை ரூ 2, ரூ 5 அல்லது ரூ10 பங்குகளாக பிரித்து தனக்கு வைத்து கொண்டு மற்றதை வெளியிடுவார்.

IPO (Intitial Public Offer)
இது IPO (Initial Public Offer) எனப்படும். அப்பொழுது ரூ 2 முகமதிப்பு என்றால் அதன் விலையில் அல்லது அதற்க்கு அதிகமாக வெளியிடலாம். நல்ல லாபத்தில் போகும் நிறுவனங்கள் அதிகமாக வைத்து வெளியிடும்.

சந்தையில் வாங்குவது (Secondary market)
IPO வெளியிடப்பட்ட பிறகு பங்குகளை சந்தயிலும் வாங்கலாம். சரி எப்படி வாங்குவது அதற்க்கு என்னென்ன தேவை என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

பங்குசந்தை ஒன்று தான் முதலீட்டின் வழியா ? பங்கு சந்தையை பார்ப்பதற்கு முன்னால் முதலீட்டின் வகைகளை பார்போம்.


1) சேம நல நிதி (Profident Fund )

இது இருபது வேலையாட்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்கிற நிறுவனங்களில் இது கட்டயமகபடுகிறது. அடிப்படை சம்பளம் + பஞ்ச படியில் பன்னிரண்டு சதவிகிதம் சேமிக்க வேண்டும். நிறுவனமும் அதே சதவிகிதத்தில் தங்களுடைய பங்கை கொடுக்கும். மொத்தம் இருபத்தி நாலு சதவிகிதம் சேமிக்கப்படும். இதற்கு கிடைக்கும் வட்டி 9.5 %.

2) வைப்பு தொகை (Fixed Deposit)

மொத்தமாக ஒரு தொகையை ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு வங்கிகளில் வைப்பு தொகையாக வைத்திருக்கலாம். 9.5 % லிருந்து 11.5% வரை வெவ்வேறு வங்கிகளில் வெவ்வேறு % வைத்து கொடுக்கிறார்கள். முதியவர்களுக்கு தனி சலுகை உண்டு.

3) Recurring Deposit (RD)

இந்த திட்டத்தில் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இத்திட்டம் செயல் படுகிறது. கட்டுகின்ற தொகை மற்றும் எத்தனை மாதங்கள் என்பதை பொறுத்து 7 to 11 % வட்டி கிடைக்கும். குறைந்த பட்சம் ரூ 100 லிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் மாத தவணை கட்டலாம்.


4) நிலங்கள் அல்லது கட்டிடங்கள் (வீடு, வணிகத்துக்காக)

இதை பற்றி அதிகம் சொல்ல தேவை இல்லை. வாங்கவில்லை என்றால் சீக்கிரம் வாங்குங்க சார் / மேடம். வீட்டு வட்டி எல்லாம் குறைந்து இருக்கிறது. வாடகை எல்லாம் ஏறுகிறது.


5) தங்கம்

(எப்படா வரும்ன்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்னு மேடம் சொல்லுறது கேட்குது) இதுவும் பழைய முதலீட்டு முறைதான். பெண் பெற்றவர்களை அலையாய் அலைகழிக்கும். மாப்பிள்ளை வீட்டாரை பார்த்து பல்லை இளிக்கும். கொஞ்சம் கொஞ்சமாய் வாங்கினால் பளு தெரியாது.

பல்வேறு வங்கிகளின் முகவரி ஒரே இடத்தில். நன்றி welcome NRI


http://www.welcome-nri.com/info/project/IndianBankstext.htm#public

எல்லோருக்கும் வணக்கம் !

என்னுடைய இந்த வலை பதிவில் பங்கு சந்தை பற்றிய விஷயங்களை எளிமையான தமிழிலில் அனைவருக்கும் புரியும் வகையில் பதிய விருப்பம். உங்கள் ஆதரவுடன் இந்த இமாலய முயற்சியில் இறங்குகிறேன். வாழ்த்துங்கள் வணங்குகிறேன். நன்றி.



;;